விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் திருச்சி ரயில் நிலையம் அருகே இன்று தொடங்கியது.
தமிழ்நாட்டில் விவசாயிகள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் கடனாளிகளாகவே உள்ளனர். இதுத் தொடர்பாக விவசாய சங்கங்கள் அவ்வபோது ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியபோதும், அரசு செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் தங்கள் வாழ்வாதரம் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் குதித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
140 ஆண்டுகள் வரலாறு காணாத வறட்சியை தமிழகம் கடந்த 2016ஆம் ஆண்டு கண்டது, 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு இன்னும் நஷ்டஈடு வழங்காததை வழங்க கோரியும், உச்ச நீதிமன்றமே அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய யோசியுங்கள் என்று கூறியும், தள்ளுபடி செய்ய மறுக்க கூடாது என்று கோரியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கோரியும், நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட கோரியும், வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாமான விலையில்
கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க கோரியும், காவிரியில் வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற கோரியும், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்த கோரியும், இடுக்கி மாவட்டத்தை கேரளாவில் இருந்து