பிரச்சனை

மாநாடு படப்பிடிப்பு முன்பே துவங்க வேண்டியது. கொடுத்த தேதியில் சிம்பு நடிக்க வரவில்லை என்று கூறி அவரை படத்தில் இருந்து நீக்குவதாக சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இதையடுத்து வெங்கட் பிரபுவும் படத்தில் இருந்து விலகினார்.


மாநாடு கைவிடப்பட்டுவிட்டது என்று கூறப்பட்ட நிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட உஷா ராஜேந்தர் தன் மகன் சிம்பு சரியான நேரத்திற்கு வந்து நல்லபடியாக நடித்துக் கொடுப்பார் என்று வாக்குறுதி அளித்தார். இதையடுத்தே மாநாடு படத்தின் வேலைகள் துவங்கப்பட்டுள்ளது. படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.