வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு படத்தில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். மாநாடு படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மாநாடு படத்தை தயாரிக்கும் சுரேஷ் காமாட்சி முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, மாநாடு படத்தில் நடிப்பவர்கள், படப்பிடிப்பு துவங்கும் தேதி ஆகியவை பொங்கல் அன்று அறிவிக்கப்படும் என்று சுரேஷ் காமாட்சி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை
மாநாடு படப்பிடிப்பு ஜனவரி 20ம் தேதி கோவையில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 16ம் தேதி தனுஷின் பட்டாஸ் படம் ரிலீஸாக உள்ளதால் அவர் ரசிகர்கள் பொங்கல் பண்டிகையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மாநாடு அப்டேட் வரும் என்பதால் சிம்பு ரசிகர்கள் பொங்கலை எதிர்பார்த்துள்ளனர். தற்போது தலைப்பை மீண்டும் படித்துப் பார்க்கவும்.