தமிழக பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்?

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்திருப்பதும், தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் செயல்படும் அரசு இருப்பதாலும், பாஜக மாநில தலைவர் பதவிக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது


கடந்த 2014-ஆம் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானதால், அவர் வகித்து வந்த பாஜக தமிழக தலைவர் பொறுப்பு தமிழிசையிடம் வழங்கப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்ற அவரது பதவிக் காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

எனினும், கடந்த மக்களவை தேர்தல் முடிவில் நாடு முழுவதும் ஒரு முடிவெடுக்க, தமிழகம் மட்டும் அதற்கு நேர் எதிரான முடிவை எடுத்தது.


தேர்தல் முடிவுகளில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்த பாஜக படு தோல்வி அடைந்தது. இதையடுத்து, தமிழிசையால் எந்த வெற்றியையும் பாஜக-வால் தமிழகத்தில் பெரிதாக ஈட்ட முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் அக்கட்சியினராலேயே வெளிப்படையாக முன் வைக்கப்பட்டன.


தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை மாற்றப்படுவார் என உறுதியாக தெரிவித்தார்.