ஆத்தூர் - சேரன் பள்ளி மாணவி களுக்கு விஐடி பல்கலைக்கழகம் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கியது

சின்னாளப்பட்டி


நெசவுத் தொழிலில் சாதனைப் படைத்த சேரன் பள்ளி சின்னாளப்பட்டி 21 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சேரன் பள்ளி மாணவி களுக்கு விஐடி பல்கலைக்கழகம் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கியது இது குறித்து பள்ளித் தலைமையாசிரியர் திலகம் சிவக்குமார் கூறும்போது சின்னானாளப்பட்டியில் ஒரு காலத்தில் நெசவுத் தொழில் பிரபலமாக விளங்கி வந்தது தற்போது நெசவுத் தொழில் நலிவடைந்து சின்னாளப்பட்டி சேலை வருங்காலத்தில் கிடைக்குமோ என்ற சந்தேகம் தான் மக்கள் மனதில் நிற்கிறது அதனால் தான் இந்த சேலைகள் அருப்புக்கோட்டைக்கு சென்று வாங்க வேண்டிய நிலமை உள்ளது இதையெல்லாம் கருத்தில் கொண்டு எங்கள் பள்ளி மாணவிகள் ஆசிரியர் வழிகாட்டி ஆசிரியர் பாண்டிச் செல்வி தலைமையில் சுஜா திவ்யதர்ஷினி சரேவ் தேவ் தர்ஷிணா ஸ்ரீ சக்தி -ஐஸ்வர்யா ஆகியோர் 100க்கும் மேற்பட்ட புராஜெக்ட்களை நடத்தி வந்தனர் இதில் நெசவுத் தொழில் சம்பந்தமாக பள்ளியில் புட்டா சேர்ப்பது குறித்து உண்டான பயிற்சியை எடுத்து அதிலும் வெற்றிப் பெற்று தமிழக அளவில் நாளைய விஞ்ஞானி என்ற பட்டத்தையும் பதக்கத்தையும் விஐடி பல்கலைகழகம் சார்பில் மயில்சாமி அண்ணாத்துரை வழங்கினார் இதையொட்டி வெற்றிப் பெற்று பதக்கங்கள் வாங்கிய மாணவிகள் மற்றும் வழிகாட்டி ஆசிரியையை ஆகியோரை பள்ளி தாளாளர் சிவக்குமார் பொருளாளர் சந்திரசேகர் நிர்வாக அறங்காவலர் அசோகன் ரவீந்திரன் பள்ளி முதல்வர் திலகம் மேலாளர் பாரதிராஜா ஆகியோர் பாராட்டினார்கள்